19.09.2023 Best Of india உணவகத்தில் இந்த வருடத்துக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது

BY admin - புதன்கிழமை, 1 நவம்பர், 2023

19.09.2023 Best Of india  உணவகத்தில் தற்போது உள்ள நிர்வாகத்தின் முதலாவது ஆண்டின்  இந்த வருடத்துக்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த பொதுகூட்டத்தில் 40 மேற்பட்ட வர்த்தக நிறுவங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டமையும்  எமது கடந்த கால செயற்பாடுகள் வேலைத் திட்டங்கள் அங்கு அனைவருக்கும் திரையில் போட்டு காட்டப்பட்டமையும் அதே நேரம்  அனைவரின் கேள்விகளுக்கும்  சந்தேகங்களுக்கும் விளக்கம் கொடுக்கப்பட்டமையும்..

எமது சங்கத்தின் பதிவுகளில் சில மாற்றங்களை கொண்டு வருவது பற்றியும்   எமது சங்கத்தின் பெயர் மாற்றம் பற்றியும் வாக்கெடுப்புக்கள்  நடாத்தி  எமது புதிய நிர்வாகம்   தமிழர் வர்த்தக சங்கம் என்ற பெயரில் இதே நிர்வாகம் இன்னும் 12 மாதங்கம் செயற்படுவதற்கு அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது