பொங்கல் விழா நிகழ்வு 2023
கடந்த 15.01.2023 அன்று இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தைத்திருநாள் பொங்கல் நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற அனைத்து வழிகளிலும் ஒத்துழைத்த அனைத்து லாச்சப்பல் வர்த்தகர்களுக்கும், மற்றும் வர்த்தக சங்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட நல்வாய்ப்புச் சீட்டிழுப்பிற்குப் பரிசுப்பொருட்களை வழங்கிய வர்த்தக நிறுவனங்களுக்கும், மற்றும் மேடை அலங்காரம், கலை நிகழ்வுகள், இசை நிகழ்வுகள் போன்றவற்றுக்கு அனுசரணை வழங்கிய வர்த்தக நிறுவனங்களுக்கும், மேடை அலங்காரம் செய்வதற்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்து தந்த நிறுவனத்திற்கும், இந் நிகழ்வை நேரஞ்சல் செய்வதற்கு அனுசரணை வழங்கிய நிறுவனங்களுக்கும், பொங்கல் நிகழ்வை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்த வளரி மற்றும், இதழ், ரி என் ரி ஆர் இணைய தொலைக்காட்சிகளுக்கும், இந்நிகழ்வை விளம்பர படுத்திய மற்றும் ஒளி ஒலி பரப்பு செய்த அனைத்து ஊடகங்களுக்கும், எம்மால் வெளியீடு செய்யப்பட்ட பொங்கல் ஆவணப்படத்திற்கு உதவிய தமிழ் மார்கட் 360 நிறுவனத்திற்கும் மற்றும் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்து தந்தவர்களுக்கும் மற்றும் பொங்கல் இடத்தில் கோலம் போட்டு தந்தவர்களுக்கும், மற்றும் நிகழ்வு நடந்த இடத்தை காலையில் வந்து அலங்காரம் செய்து தந்தவர்களுக்கும் தோரணங்கள் பின்னி மற்றும் கட்டி தந்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளையும் அன்புகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
முதல் தடவையாக திறந்த வெளியில் மிகவும் சிறப்பாக தமிழரின் பாரம்பரிய கலைகளுடன் நிகழ்ந்த இந்த பொங்கல் நிகழ்வில் பறை இசை வழங்கிய கலைஞர்களுக்கும், அனைத்து வகையிலும் ஒத்துழைத்த அனைத்து வர்த்தகர்களுக்கும் மற்றும் பாடகர்களுக்கும், தொகுப்பாளர்களுக்கும், சிலம்பு கலையை வழங்கிய கலைஞருக்கும், பொங்கலை தந்துதவிய அனைத்து உறவுகளுக்கும் பரிமாறிய வர்த்தக நிறுவனங்களுக்கும் எமது நன்றிகளை உரிமையுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஒற்றுமையே பலம் !