31.05.2024 அன்று தமிழர் வர்த்தக சங்கத்தால் இரண்டாவது தடவையாக லாச்சப்பல் வர்த்தகர்களும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பாளர்களையும் இணைத்து நடைபெற்ற அயலவர் திருவிழா (Fête des Voisins) சிறப்பாக நடைபெற்றது.கால நிலை சற்று மழையாக இருந்தபோதும் இரவு 17.30மணிக்கு ஆரம்பித்த இந் நிகழ்வு இரவு 22:00 மணி வரை நடைபெற்றது.
ஆட்டம் பாட்டம் என மிக சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் லாச்சப்பலை சுற்றியிருக்கும் குடியிருப்பாளர்களுடன் எமது மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
பாரிசு 10 நகரசபை மற்றும் காவல்துறையினரின் சிறந்த ஒத்துழைப்புடன் இந்த வருடமும் இந் நிகழ்வினை தமிழர் வர்த்தக சங்கம் அனைத்து வர்த்தகர்களின் ஒத்துழைப்புடன் நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.